Saturday, January 8, 2011

ஊடகவெளி

வணக்கம். நண்பர்களே,  

திரு. பாலசுப்ரமணியம், உதவி பேரா. இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பு துறை, மதுரை காமராசர் பல்கலைகழகம் அவர்களும் நானும் ஜனவரி 5, 2011 அன்று உருவாக்கிய குழுவே இந்த ஊடகவெளி. "ஊடகமும் ஊடகம் சார்ந்தும்" எனும் கருப் பொருளோடு இக்குழு தொடர்ந்து தன்னுடைய பயணத்தை தொடரும். 

என்னுடைய நண்பர் ஓவியர் திரு. வெங்கடேஷ் பாபு, நெல்லை, அவர்கள் 2004 இல் எனக்காக வரைந்து தந்திருந்த ஓவியத்தை ஊடகவெளிக்கான சின்னமாக இங்கே அறிவித்துள்ளோம். நாம் இக்குழுவில் பகிர்ந்துகொள்பவைகள் மற்றும் பதிவு செய்பவைகள் ஊடகவெளிக்கான பிளாக்கில் வெளியிடப்படும். உங்கள் ஆலோசனைகளும் பங்கேற்பும் எப்பொதும் நமக்கு தேவை.

நன்றிகளுடனும் தமிழர் திருநாள் வாழ்த்துகளுடனும் 
இரா. அரிகரசுதன் 


கவனத்திற்கு 

1. தனிநபர் பிரதாப படங்களை உள்ளீடு செய்ய வேண்டாம். 
2. ஊடகம் சார்ந்த புதிய அணுகுமுறைகள், வரையறைகள், சிந்தனைகள், முயற்சிகள், பயிற்சிகள், பாடங்கள், விமரிசனங்கள், சாதனைகள், வேதனைகள், அக்கறைகள், எதிர்கால ஊடகங்கள், ஆய்வுகள் இன்னும் இதுபோன்ற பதிவுகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.
3. ஊடகம் சார்ந்த நிகழ்வுகள் முன்னறிவிப்புகள் அறிவிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.
4. ஒத்த கருத்து விருப்பு உடையவர்களை குழுவோடு இணைத்து குழுமம் ஆகலாம்.
5. பொது ஒழுக்க குறைவான பதிவுகளை பதிய வேண்டாம். 
6. கருத்துகள் பதிவருக்கு உரிமையானது. அதுபோலவே அவரே பொறுப்பானவரும் கூட. 
7. தங்களுக்கு விருப்பம் இல்லை எனில் இக்குழுவை விட்டு எந்நேரத்திலும் தாங்கள் வெளியேறலாம்.